முகப்பு அரசியல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்!

நுரையீரல் தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், இன்று காலை சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைந்த காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் என்ற வேட்பாளர் போட்டியிட்டார். பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே, அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை மாதவராவ் உயிரிழந்தார்.

கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் நேரடியாக அவரால் ஈடுபட முடியவில்லை. இதன் காரணமாக அவருக்குப் பதிலாக அவரது மகளே பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments