முகப்பு செய்திகள் இந்தியா யுனெஸ்கோ எக்குவடோரியல் கினியா விருது; பரிசுத்தொகை அறிவிப்பு!

யுனெஸ்கோ எக்குவடோரியல் கினியா விருது; பரிசுத்தொகை அறிவிப்பு!

வாழ்க்கை அறிவியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு
யுனெஸ்கோ எக்குவடோரியல் கினியா விருது மற்றும் பரிசுத் தொகையை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மனிதர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு விஞ்ஞானத்தை பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சி மேற்கொள்ளும் கல்வி நிறுவனம் அல்லது மாணவர்களை (தனிநபர்) யுனெஸ்கோ அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

வறுமை ஒழிப்பு, மேம்பட்ட சுகாதாரம், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு ஆகிய வாழ்க்கை அறிவியல் மூலமே மனித குலத்தை உயர்த்த முடியும். எனவே, வாழ்க்கை அறிவியல் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவித்தல், ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலக்குகளை நோக்கி சிறந்து விளங்கும் கல்வி நிறுவனம் அல்லது தனிநபர்களை ஊக்குவிக்கும் விதமாக யுனெஸ்கோ மற்றும் எக்குவடோரியல் கினியா என்ற நாடும் இணைந்து ஆண்டுதோறும் 3 பரிசு வழங்குகிறது.

பரிசுத் தொகையாக 3 லட்சத்து 50,000 அமெரிக்க டாலர் பணம் மூன்றாக பிரித்து, விருதுடன் வழங்கப்படும்.


இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்ட செய்தி குறிப்பு:


வாழ்கை அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டு பரிசு மற்றும் விருதினை பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க யுனெஸ்கோ வெளியிட்ட அறிவிப்பு டிசம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், யுனெஸ்கோ எக்குவடோரியல் கினியா பரிசை பெற விண்ணப்பம் மார்ச் 5-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தங்களின் ஆராய்ச்சிகளை விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ எக்குவடோரியல் கினியா பரிசுத் தொகை தொடர்பாக கூடுதல் விவரங்களை https://en.unesco.org/stem/lifesciences-prize என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments