முகப்பு விளையாட்டு ஐ.பி.எல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்!

ஐ.பி.எல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்!

சி.எஸ்.கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக சி.எஸ்.கே நிர்வாகத்திடம் ஹர்பஜன் விளக்கமளித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க சி.எஸ்.கே அணி கடந்த மாதம் 21-ம் தேதி சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் துபாய் சென்றனர். இதற்கு முன் 5 நாட்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பங்கேற்கவில்லை.

இதையடுத்து ஹர்பஜன் சிங் துபாயில் நேரடியாக பயிற்சியில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஹர்பஜன் சிங் இதுவரை சி.எஸ்.கே அணியில் இணையவில்லை. அவர் நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவில்லை என ஹர்பஜன் சிங் அணி நிர்வாகத்திடம் விளக்கமிளத்துள்ளார். ரெய்னாவை தொடர்ந்து இராண்டாவது வீரராக ஹர்பஜன் சிங் அணியிலிருந்து விலகி உள்ளார்.

இதனிடையே துபாய் சென்றுள்ள சி.எஸ்.கே வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்கி உள்ளனர். சி.எஸ்.கே அணியில் கொரோனா பாதித்தவர்களுக்கு எடுக்கப்பட்ட 2வது பரிசோதனையிலும் கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதால், வீரர்கள் தங்களது தனிமைப்படுத்தி கொள்ளும் நாட்களை நிறைவு செய்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

கிரிக்கெட்: ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...

கிரிக்கெட்: நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...

தென் மாவட்டங்களுக்கு கனமழை!

புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...

புரவி புயல்: முதல்வருடன் பிரதமர் பேச்சு!

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் விவரம் கேட்டறிந்தார் வங்கக்கடலில்...

Recent Comments