முகப்பு சினிமா  சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபலம்!

சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபலம்!

0
9

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் மற்றும் நடிகர், எஸ்.ஜே.சூர்யா – சமுத்திரக்கனி இணைந்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

டாக்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்து நடிக்கிறது.

மேலும் ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் உடன் நடித்திருந்த சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல் சூரி – சிவகார்த்திகேயன் உடன் நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார்.

முதல்முறையாக இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார்.

மேலும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் பிக்பாஸ் ஷாரிக் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 11-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் இன்று நடிகர் சமுத்திரக்கனி படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்