தமிழக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, தமிழக டி.எஸ்.பிக்கள் – ஏடி.எஸ்.பிக்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் மாநிலம் முழுவதிலும் 51 டிஎஸ்பிக்கள் மற்றும் 25 ஏடிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார்.