அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கிடையேயான தொகுதி ஒதுக்கீடு முடிந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் 2021 வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை இலவச மின்சாரம் மற்றும் மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா என மக்களை தங்கள் பக்கம் திருப்பியுள்ளார்.
அதிமுக செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாமல், எடப்பாடி தலைமையில் அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல். இக்கூட்டணியில் பாரதிய ஜனதா, பா.ம..க, தேமுதிக கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 177 தொகுதிகளிலும்,ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்களும், பாரதிய ஜனதா கட்சிக்கு 18 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 12 இடங்களையும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதர சிறு கட்சிகளுக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.